பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களால் ‘தற்காலத்தில் நவீன தொடர்பாடல் சாதனங்கனை திரு அவையின் படிப்பினைக்கு ஏற்ற விதமாக கையாளல்’ என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டதுடன் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு செயற்பாட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்பணிசபை அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

