யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், நவம்பர் மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு பங்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

எழுவைதீவு இறங்குதுறையை வந்தடைந்த ஆயர் அவர்கள், பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூஸன் அவர்களின் தலைமையில், எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் புனித தோமையார் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து, ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த ஆயர் அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘புனித தோமையார் அகம்’ அருட்சகோதரிகள் இல்லத்தையும் ஆசீர்வதித்து திறந்துவைத்து புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள புனித பற்றிமா அன்னையின் சுரூப கட்டடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.

By admin