யாழ். புனித சால்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள், பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நவம்பர் மாதம் 3, 4, 5ஆம் திகதிகளில் நடைபெற்றன.

பாடசாலை அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பநாள் மேல் பிரிவு மாணவர்களுக்கான நவீன கற்றல் திறன் வகுப்பறை, நினைவரங்கு மற்றும் போடியம் என்பன உத்தியோகபூர்வமாக மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. றஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் மாணவர்களின் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இரண்டாம் நாளான நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை ஆன்மீக மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. காலை சிறப்புத் திருப்பலி இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான நவீன கற்றல் திறன் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் பாடசாலையின் நுழைவாயில் தரை அழகுபடுத்தல் திட்டத்தின் நினைவுக் கல் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன.

பொன்விழாக்கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளான நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் 150 ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளை தாங்கிய பொன்விழா மலர் வெளியீடும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

வடக்கு மாகாண ஆளுநர் உயர்திரு வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin