கொய்யாத்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆரம்பமாகி ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

