மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி மானிப்பாய் வேளாங்கன்னி அன்னை சுருபத்தில் ஆரம்பமாகி புனித அன்னாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

வணக்கமாதத்தை சிறப்பித்து வலய ரீதியாக அன்பிய திருப்பலியும் திருப்பலி நிறைவில் அன்பிய விருந்தும் இடம்பெற்றன.

By admin