மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொளனி புனித சின்னமடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் இறைமக்கள் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்திலிருந்து பாதயாத்திரையாக புனித சின்ன மடுமாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

