மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்ட முருங்கன் மறைக்கோட்ட சமூக மேய்ப்புப்பணி முன்னாயத்தக் கூட்டம் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
முருங்கன் புனித டொண் பொஸ்கோ இல்ல கேட்போர் கூடத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் வழிநடத்தலில் குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட திட்டமிடல் செயற்குழு செயலர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முருங்கன் மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சமூக மேய்ப்புப்பணி செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

