சுன்னாகம் பங்கின் புனித அந்தோனியார் மற்றும் ஏழாலை புனித இசிதோர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களால் காலை உணவு, சிற்றுண்டி வகைகள், குளிர்பானம், மரக்கன்று, மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டதுடன் பங்குமக்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin