கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்செபமாலையுடன் ஆரம்பமான இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் தமது பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்றப்பட்டனர்.
தொடர்ந்து சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் முதியோருக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் முதியோருக்கான கௌரவிப்பு மற்றும் மகிழ்வூட்டல் செயற்பாடுகளுடன் அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

