நாரந்தனை பங்கு வியாகுல மாதா மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 22ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சேனை அங்கத்தவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா செயலாளர் மற்றும் பங்கின் லூர்து மாதா பிரசீடிய அங்கத்தவர்கள், சின்னமடு மாதா பிரசீடிய அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

