மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரி பற்றிமா ஜெயந்தி அருளப்பு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வில் கவிதை, பேச்சு, பாடல் போன்றவை இடம்பெற்றதுடன் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமதி மேரி லூக்கிறேசியா அன்ரன் மற்றும் திரு றொபின்சன் ஜெயதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
அத்துடன் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத நிறைவு திருச்சொருப பவனி ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புதுமடம் திரு இருதய அண்டவர் சுருபத்தில் ஆரம்பமாகி கர்த்தர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை பங்கின் ஸ்துதிகளின் இராக்கினி மரியாயின் சேனை பிரசீடிய அங்கத்தவர்கள் சிறப்பித்ததுடன் செபமாலை பவனியில் சிறார்கள் மரியன்னையின் வேடமணிந்து பங்குபற்றினர்.
திருப்பலி நிறைவில் மகிழ்வு விருந்தும் இடம்பெற்றது.

