வணக்கமாத சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கு மக்களால் மேடையேற்றப்பட்ட மரியன்னையின் காட்சிகளை சித்தரிக்கும் ‘இதோ உம் தாய்’ நாடக ஆற்றுகை ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 70அடி மேடையில் 90ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகை மேடையேற்றப்பட்டது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin