அல்லைப்பிட்டி பங்கு அன்பிய குழுமங்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளன்று மறைமாவட்ட ஆணைக்குழு ஊக்குவிப்பாளர்களால் அன்பிய குழுக்கள் தரிசிப்பு முன்னெடுக்கப்பட்டு நற்செய்தி பகிர்வு, கலைநிகழ்வுகள், அன்பிய விருந்து என்பன நடைபெற்றன.
தொடர்ந்து அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் மீளாய்வு, கலைநிகழ்வுகள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை அன்பிய திருப்பலியும் தொடர்ந்து அன்பிய ஊக்குவிப்பாளர்கள், மறையாசிரியர்கள், பக்திச்சபை அங்கத்தவர்கள் மற்றும் அருட்பணி சபையினருக்கான அன்பிய வாழ்வு தொடர்பான கருத்துரையும் அன்பிய பயிற்சியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

