யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு பங்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

நெடுந்தீவு இறங்குதுறையை வந்தடைந்த ஆயர் அவர்கள், பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில், பாரம்பரிய கலாசார முறைப்படி பாண்ட் வாத்திய இசையுடன் புனித யுவானியார் ஆலயத்திற்கு அழைத்துசெல்லப்பட்டார்.

தொடர்ந்து, ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த ஆயர் அவர்கள், 108 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தையும் வழங்கினார்.

திருப்பலி நிறைவில், புனரமைக்கப்பட்ட பங்குப் பணிமனையை ஆயர் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

மேலும், பங்கிற்குட்பட்ட ஒருசில ஆலயங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட ஆயர் அவர்கள், திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கும் சென்று அருட்சகோதரிகளுடன் பங்கு மக்களுடனும் கலந்துரையாடினார்.

By admin