சுன்னாகம் பங்கின் முன்னைநாள் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை எட்மண்ட் மைக்கல் அவர்களின் நினைவாக சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த “அறிவாலயம்” மறைக்கல்வி வகுப்பு கட்டடதொகுதி திறப்புவிழா ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து கட்டட தொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

தொடர்ந்து ஆலய செயலாளர் திரு. பிலிப்பு பிறேமதாசன் அவர்களால் அருட்தந்தை எட்மண்ட் மைக்கல் அவர்களை பற்றிய நினைவுரை வழங்கப்பட்டதுடன் அருட்தந்தையின் நினைவாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.

இக்கட்ட தொகுதிக்கான ஒரு மில்லியன் ரூபாய் நிதி அனுசரணையை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin