அல்லைப்பிட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர் தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து புனித யுவானியார் ஆலயத்தில் இளையோருக்கான ஆளுமைத்திறன் விருத்தி கருத்தமர்வும் இடம்பெற்றது.

இக்கருத்தமர்வை யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை பங்கு பணிமனையில் இளையோருக்கான ஒன்றுகூடலும் மகிழ்வு விருந்தும் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் 20 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin