அல்லைப்பிட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பவனி அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித யுவானியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நான்கு மறையுண்மைகள் தியானிக்கப்பட்டு றோசா மாதா தியானமும் நடைபெற்றது.
இப்பவனியில் 100ற்கும் அதிகமான பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

