யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் தரம் 11 மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடல், வில்லுப்பாட்டு, கவிதை, மறையாசிரியர்களின் நாடகம் போன்ற கலைநிகழ்வுகளும் மறையாசிரியர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஆன்மீக குரு அருட்தந்தை நீக்லஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

