சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தனி ஓட்டம், பொருள் தெரிதல், பழம் பொறுக்குதல், முயல் பாய்ச்சல், நின்று நீளம் பாய்தல், புதிர் தீர்த்தல், பணம் சேகரித்தல், பழைய மாணவர்களுக்கான ஓட்டம், கொடி ஓட்டம், கோபுரம் அடுக்குதல், பாம்பு ஓட்டம், தாரா நடை, எண் ஓட்டம், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக வியாபார கற்கைகள் பீட விரிவுரையாளர் திரு. சுதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை குளமங்கால் குழுமத்தலைவி அருட்சகோதரி டிலானி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் செல்வி கிளேறா பிரான்சிஸ்கா மற்றும் சுன்னாகம் பொதுச்சுகாதார மருத்துவமாது திருமதி சுகிர்தா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

