சிறகுகள் அமையத்தின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், “வாசிப்பு மாதம் 2026 – இளம் எழுத்துகள் 2026” எனும் நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“வாசிப்பிலிருந்து படைப்பிற்கு” எனும் கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில் தரம் 1–2 மாணவர்களுக்கு ஓவியம் வரையும் போட்டியும், தரம் 3–5 மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் போட்டியும், தரம் 6–7 மாணவர்களுக்கு நன்னெறிக் கதை எழுதும் போட்டியும் தரம் 8–10 மாணவர்கள் விஞ்ஞானப் புனைவுக் கதை போட்டியும் தரம் 11–13 மாணவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை போட்டியும் நடைபெறவுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 4,000 முதல் 5,000 மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில், மாணவர்கள் பாடசாலை ஊடாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பங்கேற்க முடியும். தகுதியான படைப்புகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், சிறந்த படைப்புகள் சிறப்பு நூலாகவும் வெளியிடப்படவுள்ளன.

இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்கள் படைப்புகளை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் சிறகுகள் அமையம் இல. 21, சீனியர் ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By admin