யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியர் திருமதி றஜிதா சுரேஸ் அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2025ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பு சித்தி மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பும் பேச்சு, ஆங்கிலப்பாடல், குழுப்பாடல், இசையும் அசைவும், குழு நடனம், கதை சொல்லுதல், நாட்டார் பாடல் மற்றும் சிறுவர் நாடகம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கல்லூரியின் பழைய மாணவனும், மக்கள் வங்கியின் தலைமைச் அலுவலக கணக்காய்வுபிரதி முகாமையாளருமான கிறிஸான் D.B. அருள்சோதி அவர்கள் பிரதம விருந்தினராகவும், அவரது பாரியார் அன்ரனீற்ரா D.K அருள்சோதி கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

