மட்டக்களப்பு மறைமாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஹர்சதன் ரிச்சர்ட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

