புத்தூர் பரிசுத்த லூக்கா மெதடிஸ்த திருச்சபை நிறுவப்பட்ட 181 வது ஆண்டு நிறைவையும், அதே வளாகத்தில் அமைந்துள்ள பரிசுத்த லூக்கா மெதடிஸ்த வைத்தியசாலை நிறுவப்பட்டதன் 125வது ஆண்டு நிறைவையும் நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட நன்றி வழிபாடு, ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.
புத்தூர் மிஸன் பொறுப்புக் குரு அருட்பணியாளர் ரொபர்ட் சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச்சபைத் தலைவர் அருட்பணியாளர் கிங்ஸ்லி வீரசிங்க, செயலாளர் அருட்பணியாளர் டெரன்ஸ், துணைத் தலைவர் திருவாளர் சசிகரன் வடகிழக்கு திருமாவட்டத் தலைவர் அருட்பணியாளர் சாம் சுபேந்திரன் மற்றும் சேகரப் பொதுநிலையினர் ஆகியோருடன், யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தைச் சேர்ந்த பல திருச்சபைகளின் பிரதிநிதிகளாக, அருட்பணியாளர்களும் பொதுநிலையினரும் பங்குபற்றினர்.

