திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்திற்குட்பட்ட கோணேசபுரி புனித மிக்கேல் அதிதூதர் சிற்றாலய வருடாந்த திருவிழாவும் புதிய முகப்பு திறப்பு விழாவும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து ஆலய முகப்பை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin