யாழ்ப்பாணம் மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் சிறுவர் தினம், முதியோர் தினம் மற்றம் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு ஆகியவற்றை இணைத்து முன்னெடுக்கப்பட்ட முப்பெரும் விழா ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சாவற்கட்டு மகாத்மா சனசமூக நிலையம் முன்பாக தேசிய சாதனையாளர்கள் மாலையணிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் தேசிய மட்ட சாதனையாளர்கள், முதியோர், சிறார்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன், வலிகாம கல்வி வலய தமிழ்பாட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. சோமசுந்தரம் கலாவண்ணன், வலிகாம கல்வி வலய உடற்கல்வி பாட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. குமாரசூரியர் செந்தில்குமரன் வலிகாம கல்வி வலய பிரதிநிதி திருமதி நித்தியா அருள்மொழிவர்மன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் திரு. தவபாலன் ரவிமோகன், மூத்த அருட்சகோதரிகள் லோறன்சியா லம்பேட், மில்றட் பேதுருப்பிள்ளை, முதியோர் திரு. திருமதி சித்தாத்துரை பிரான்சிஸ்கா ஞானசீலி, ஆசிரியர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin