இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மானிப்பாய் பங்கு மக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
கழக இயக்குனர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் திரு. அனுஸ்டதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்கள் கலந்து சமகாலத்தில் திருஅவையில் பொதுநிலையினரின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து கழக கூட்டம் நடைபெற்றதுடன் இக்கூட்டத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு கழகத்தின் கடந்த கால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் 75ற்கும் அதிகமான பொதுநிலையினர் பங்குபற்றி பயனடைந்தனர்.

