ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி செபமாலையுடன் மானிப்பாய் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்னையின் திருச்சொருபத்தில் ஆரம்பமாகி புனித அடைக்கலநாயகி ஆலயத்தை சென்றடைந்து.
அத்துடன் ஆனைக்கோட்டை பங்கின் தேவர்கட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி கேணியடியில் ஆரம்பமாகி தேவர்கட்டு திரு இருதயநாதர் ஆலயத்தை சென்றடைந்து.
பல்வேறு இடங்களிலும் காட்சிகொடுத்த மரியன்னையின் வேடங்;கள் தரித்து மறைக்கல்வி மாணவர்கள் இப்பேரணிகளில் பங்குபற்றினர்.

