கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய 110ஆவது ஆண்டு பாடசாலை தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெக்ரலின் மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் திருப்பலியியும் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் அரங்க நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட சின்ன திரேசாளின் திருச்சொருபம் ஆயர் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து கலைநிகழ்வுகள், நினைவுமலர் வெளியீடு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரென பலரும் கலந்துகொண்டனர்.

