சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கிடையிலான இல்ல ரீதியான விளையாட்டுக்களும் பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

