யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பந்து தள்ளுதல், ஆமை நடை, பழங்கள் சேகரித்தல், வளையம் போடுதல், கோப்பையில் பந்து வைத்தல், கையில் மோதிரம் அணிதல், இசைவும் அசைவும், கூம்பினுள் வளையம் போடுதல், கொடியில் ஆடைகள் உலர விடல், வளையம் பாய்தல், சாக்கோட்டம், வடிவம் தெரிதல், சொல்லாக்கம், சமநிலை நடை, வளையம் பொருத்துதல், இலக்கு நோக்கி பந்து போடுதல், உணவு தயாரித்தல், பாதை அமைத்தல், நிறப்பந்துகளை அடுக்குதல், தடை தாண்டுதல், காலால் பந்து வைத்தல் போன்ற விளையாட்டுக்களுடன் பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். வலய முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பிராசா சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா, யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

