சில்லாலை பங்கு புனித யோசவ்வாஸ், புனித யாகப்பர் வின்சன்ட் டி போல் சபை மாணவர் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலய டெய்சி மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில், தலைவர் சகோதரி சனோஸா, செயலாளர் தர்சிகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சபையின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

வலிகாம பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. யூட் கருணாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் மறைமாவட்ட வின்சன்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம், மத்திய சபை உபதலைவர், அருட்சகோதரி, முன்பள்ளி ஆசிரியர், பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களென பலரும் பங்குபற்றினர்.

By admin