தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக தீவக மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

தீவக மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர் அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலந்துரையாடல் என்பவற்றின் ஊடாக பங்கேற்பாளர்களை வழிப்படுத்தினர்.

தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க், கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் திரு யேசுரட்ணம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் 30ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin