வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குருக்களின் வருடாந்த தியானத்திற்கான முன்னேற்பாடுகளை ஆராயும் நோக்கில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் மறைமாவட்ட நிதி முகாமையாளருடன் இணைந்து ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தியான இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு அருட்சகோதரிகளால் வரவேற்கப்பட்ட ஆயர் அவர்கள் தியான இல்லத்தை பார்வையிட்டு, அதன் நிலைமை, தேவைகள் தொடர்பாகவும் தியானத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தப் பணிகள் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

