புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், மகிழ்வு விருந்து என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் 70 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

