அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த கொழும்பு மாகாண குருக்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 10 புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் திருத்தொண்டர்கள் அகில ஜானித் ரத்னசேகர, மற்றும் பேதுரு கயான் பிரதீப் குரூஸ் ஆகியோர் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin