யாழ். வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி செயலமர்வு புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசக இணைப்பாளர் திருமதி விக்டோரியா எல்விஸ் பிரஸ்லி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்செயலமர்வில் தேசிய கல்வி நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. அல்பிறட் அவர்கள் வளவாளராக கலந்து ஆசிரியர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய பாடசாலைகளை சேர்ந்த 45 வரையான ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin