திருகோணமலை மறைமாவட்டம் மூதூர், இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 01ஆம் திகதி நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்கள், ஆடல், பாடல், பரிசளிப்பு இரவு விருந்துபசாரம் என்பனவும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் 150 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

அத்துடன் புனித செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இம்மாதத்திற்கான நிகழ்வுகள் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் அன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.

இதன்படி, தினமும் மாலை 7.50 மணிக்கு செபமாலையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு திருப்பலியுடன் மெழுகுவர்த்தி பவனியும் இடம்பெறவுள்ளன.

By admin