திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கலாச்சார விழா புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள், பங்குமக்கள் மற்றும் பக்தி சபையினரின் கிராமிய நடனங்கள், கோலாட்டம், தாளலயம், நடனம், நாடகங்கள், வில்லுப்பாட்டு, உலக்கை நடனம் என்பவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

