சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் நட்சத்திரம்; அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெறால்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.
1959ஆம் ஆண்டு சிறிய ஆலயமாக அமைக்கப்பட்ட கட்டுவன் புனித 10ஆம் பத்திநாதர் ஆலயம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள நிலையில் அவ்வாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கோடு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

