யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

