பூநகரி பங்கு குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றிச்சர்ட் ஒலிவர் ரெறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் திருமதி பப்சி மரியதாசன் மற்றும் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் ஆகியோர் குடும்ப வாழ்வு மற்றும் தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி பயனடைந்தனர்.

