இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 31ஆவது மாணவர் இலக்கிய விழா, புரட்டாதி மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது.

இவ்விழாவின் ஓர் அங்கமாக, யாழ். திருமறைக் கலாமன்றத்தின் தயாரிப்பில், மன்றக் கலைஞர்களால் மகாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடகம் புரட்டாதி மாதம் 23ஆம் திகதி கடந்த புதன்கிழமை, பேராசிரியர் எதிர்வீர சரச்சந்திரா திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்டது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இவ்விலக்கிய விழாவில் பல்வேறு சிங்கள நாடகங்கள் மேடையேற்றப்பட்ட நிலையில், தமிழ் நாடகமாக ‘புதியதொரு வீடு’ மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin