இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா அவர்கள் செப்டெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநர், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் பிரதிநிதிகள், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தினரை சந்தித்ததுடன், காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கும் விஜயம் செய்தார்.

தொடர்ந்து செப்டெம்பர் 24ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் தலைமன்னாருக்குச் சென்ற அவர், முன்னர் இலங்கை–இந்தியா பயணிகள் படகுச் சேவை இடம்பெற்ற பாவுத் துறையையும், மடு திருத்தலத்தையும் பார்வையிட்டார்.

இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை மற்றும் மன்னார் வாழ்வுதய நிறுவன இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

By admin