சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான திரு. அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி கவனயீர்ப்புப் போராட்டம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து திரு. அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

