அக்கராயன் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரன் ஜேசுதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலியில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன், பங்குமக்கள் மற்றும் பிறசமய சகோதரர்களென பலரும் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin