யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றின் இறுதிப்போட்டி புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென் றோக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் சாள்ஸ் சலன்ஸர் மற்றும் மத்தியூஸ் லெகன்ஸ் அணிகள் போட்டியிட்டு சாள்ஸ் சலன்ஸர் அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

பாடசாலையின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திரு. கிறிஸ்தோப்பர், ஓய்வுநிலை ஆசிரியர் திரு. தவநேசன், ஓய்வுநிலை கணக்காளர் திரு. கில்பேட்குணம், விழாக்குழு தலைவர் திரு. தபேந்திரன், பழைய மாணவர்கள் திரு. ஆறுமுகம் சிவலோகநாதன்; திரு. இம்மனுவேல் யேசுராசா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

ஆவணி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியில் 08 அணிகள் பங்குபற்றியதுடன் இப்போட்டிக்கான அனுசரனையை ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பாடசாலை பழைய மாணவர் திரு. யேசுராசா டிலோஐன் கோபி அவர்கள் வழங்கினார்.

By admin