சலேசியன் சபை குருக்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நீர்கொழும்பு கிறிஸ்தவர்களின் சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
கண்டி மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை வியான்னி பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் திருத்தொண்டர்கள் ஸெஹான் மதுரங்க திஸேரா, சுராஜ் குஸேன் பறுணாந்து, நிசுன் அக்ஸான் பறுணாந்து, அன்ரனிதாஸ் கிங்ஸ்லி ஆகியோர் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

