தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம் புரட்டாதி மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் கண்டி கிளாரட் நிவாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழுவுக்குப் பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்கிரமசிங்க அவர்களின் வழிநடத்தலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் திருப்பலி, அன்பிய தரிசிப்பு, அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி, அருட்தந்தை அல்வின் பீட்டர் பெர்னாண்டோ அவர்களின் ‘தூய ஆவியாரில் உரையாடல்’ என்னும் தலைப்பிலான கருத்துரை, அறிக்கை சமர்ப்பிப்பு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட அன்பிய இயக்குநர்கள் மற்றும் பிரதிநிகள் கலந்து கொண்டதுடன் கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட அன்பிய இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன், அருட்தந்தை லியான்ஸ், திருமதி நிமல்டா ஜெயக்கொடி, திருமதி ஜாக்குலின் மற்றும் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் பங்குபற்றியதுடன் 65ற்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin