இலங்கை அரச படையினரால் மட்டக்களப்பு – சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பிரதேசங்களை அண்டிய பகுதியில் காணாமலாக்கப்பட்டு கொல்லப்பட்ட அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் திருப்பலி ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருப்பலியை இந்தியா கனடா அமேரிக்கா நாடுகளில் பணியாற்றும் அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களுடன் கல்விகற்ற அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

1986ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் திகதி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்து கல்முனையிலிருந்து மீண்டும் சொறிக்கல் முனைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பு – சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பிரதேசங்களை அண்டிய பகுதியில் காணாமலாக்கப்பட்டு கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin