பதுளை மறைமாவட்டம் புத்தள 17ஆம் கட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்லோ அக்குட்டிஸ் ஆலய திறப்புவிழா ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் கொஸ்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் அன்றைய தினம் இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித கார்லோ அக்குட்டிஸின் திருப்பண்டமும் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin